சில முழுக்கதைகளை விட
அதன் முன்னுரைகள்
மூச்சு முட்டவைக்கும்
சில முன்னுரைகளை விட
அடுத்ததாய் வரும் என்னுரைகள்
இதமான இழைவு தரும்
இங்கே நான் என்ற
என் கதையில்
எனக்கு, முன்னுரை தந்தவளும் நீதான்
என்னுரையானவளும்
நீதான்
கடல் போல்த் தவித்தவனை
கங்கையாய்த்
தவழ வைத்தாய்
ஆலாய்ப் பறந்தவனை
அரணாய்
அணைத்து நின்றாய்
நெருப்பாய்க் கனிந்தவனை
சுடராய் சுமந்து நின்றாய்
கனவுகளில் கலைந்தவனை
நிஜங்களில் நிற்க வைத்தாய்
வண்ணங்கள் ஏழுதான்
ஓவியக்காரன் தானே அற்புதமானவன்
சொற்களும் ஆயிரமாயிரம்தான்
கதையாய்ப் புனைபவனே
காவியக் காரனாகிறான்
ஒற்றையடிப் பாதையில்லை
வாழ்க்கை
ஒருவர்பின் ஒருவர்
பாதச் சுவடுகள் பற்றி
பயணம் செய்வதற்கு
அகண்டு விரிந்திருக்கிறது
உலகம்
வா அருகருகே கைகோர்த்து
அளவளாவிச் செல்வோம்
இருவரும்
சொல்லித்தந்தவள்
நீதானே
இதைச் சொல்லி மகிழ்வதில்
எனக்கென்ன தயக்கம்
என் சிரிப்பில் நீ சிரித்து
நான் அழுதால் எனை அணைத்து
இணைவாய் இருந்தவளே
இன்று மட்டும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
இந்த
உள்ளம் பொறுத்திடுமா சொல்
துயரம் துறந்துவிடு
தோழமை நெருங்கி விடு
நீண்டு தெரிகிறது பாதை
வா
தொடர்ந்து செல்வோம் பயணம்....
December 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான வரிகள்..
ReplyDeleteபாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
ReplyDeleteநன்றி கலையரசன். உங்கள் இனிப்பான பாராட்டுகள் எனது அடுத்த பதிவுகளுக்கும் ஊக்கம் தரும்.
ReplyDeletesettings -> comments--> word verification க்கு no குடுங்க...
ReplyDeleteநீங்கள் கேட்டுக்கொண்டபடி "NO" கொடுக்கப்பட்டுள்ளது.
இனி
தடைகள்
எதுவுமில்லை எமக்கு
ரசித்து படித்தேன். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்படிக்கு தேடல்.
Thank you thedal.
ReplyDelete