August 25, 2010

கனவின் குழந்தைகள்

பிறந்த மேனியும்
பொக்கைச் சிரிப்புமாய்
இயற்க்கையின் படைப்பாய்
இருக்க முடிந்ததில்லை
இங்கே

ஆடைகள்
அணிந்த பொழுதே
ஆசைகளையும்
அணிவித்தார்கள்
மழலைச் சொற்களின்
பொருள் உணர்ந்தபொழுதே
பொய்களையும்
ஊட்டிவித்தார்கள்

தன்னினத்திடம்
தானே
தட்டிப் பறிப்பதில்லை
நிர்வாண விலங்குகள்

உற்றது பசியிருக்க
தான் உண்டு மகிழ்ந்ததில்லை
ஜந்தறிவுச்
செல்வங்கள்

கோழைகளை வீரர்களாயும்
அதிகப் பிரசங்கிகளை
அதி மேதாவிகளாயும்
அவரவர் அறிவுக்கேற்ப்ப‌
அலப்பலாய் வளர்த்ததில்
முட்டாள் முயல்கள்
வெற்றியின் எக்காள‌த்திலும்
அமைதியான ஆமைகள்
தோல்வியின் மெளனத்திலுமாய்

நீயாய் இரு
சமத்துவம் செய்
மென்மையாய் நேசம் கொள்
இவைகளெல்லாம்
எப்பொழுதும்
எவருக்கும்
எட்டாக் கனிகளாய்...

No comments:

Post a Comment